×

இடைக்கழிநாடு பேரூர் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா இந்தியாவிற்கே வழிகாட்டியாக புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் புகழாரம்

செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில், இந்தியாவிற்கே வழிகாட்டியாக ‘‘புதுமைப்பெண்’’ திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார். மேலும், திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூர் திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் திமுகவில் உள்ள மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செய்யூர் அடுத்த விளம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் மோகன்தாஸ் அனைவரையும் வரவேற்றார்.

இதில், இடைக்கழிநாடு பேரூர், கருங்குழி பேரூர், இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், 100 மூத்த முன்னோடிகளுக்கு பேரூர் செயலாளர்கள் மோகன்தாஸ், சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பாபு ஆகியோரின் ஏற்பாட்டில் தலா பத்தாயிரம் மதிப்புள்ள பொற்கிழியினை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். இதனை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக புடவைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், ‘கலைஞர் தனியார் பேருந்துகளை அரசு பொதுவுடமை ஆக்கியதால் தான் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை ஏற்படுத்த முடிந்தது.

இதனால், 50 லட்சம் பெண்கள் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். நின்ற தேர்தலில் எல்லாம் வெற்றி களம் கண்ட தலைவர் கலைஞர், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்று தந்தவர் கலைஞர்’ என புகழாரம் சூட்டினார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசுகையில், ‘திமுக தான் தமிழினத்தை, தமிழ் மொழியை காக்கின்ற கட்சி. நிலையான உறுதியான கொள்கையை கொண்ட கட்சி. பெரியார், அண்ணா, கலைஞர் சென்ற வழியினை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொடர்கிறார். திமுகு மூத்த முன்னோடிகள் இனிவரும் காலங்களில் உங்களுடைய மகன் உங்களுடைய பேரப்பிள்ளைகளை இந்த இயக்கத்தில் அழைத்து வந்து அறிமுகம் செய்தாலே அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழந்து விடும்.

கலைஞர், பெண் பிள்ளைகள் படித்தால், தனக்கு பிறக்கும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த சமுதாயத்தில் படிக்க வைக்கும் மாபெரும் பொறுப்பு அந்த தாய்க்கு ஏற்படும். எனவே, பெண் கல்வி தரம் உயர வேண்டும் என கலைஞர் சொன்னார். அதையும் தாண்டி முதல்வர் ஸ்டாலின் ‘ஒரு தந்தையாக அழைக்கிறேன் வாருங்கள், கல்லூரியில் சேருங்கள், படியுங்கள், உங்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குகிறேன்’ என இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டியாக ‘‘புதுமைப்பெண்’’ திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ் சமுதாயம் வளர வேண்டும் என்பதற்காகவும், அனைவருக்கும் அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆட்சி நடத்துபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவை தலைவர் இனியரசு, ஒன்றிய செயலாளர் சிற்றரசு, பேரூராட்சி மன்ற தலைவர்கள் சம்யுக்தாஅய்யனார், தசரதன், ஒன்றிய பெருந்தலைவர் சுபலட்சுமி, துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், சிறுபான்மையினர் மாவட்ட துணை அமைப்பாளர் பஷீர், அணிகளின் நிர்வாகிகள் ஆதிகேசவலு, வஜ்ரவேலு, பாரத், பால்ராஜ், கலைச்செல்வி ஜெகநாதன், பேரூர் நிர்வாகிகள் அருணா, ரஞ்சித்குமார், சங்கர், சாந்தி முருகேசன், சசிகுமார், பக்தவச்சலம், பக்ருதீன் அலி அகமது, நாகூர் மீரான், ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பேரூராட்சி மன்ற உறுப்பினர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

The post இடைக்கழிநாடு பேரூர் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா இந்தியாவிற்கே வழிகாட்டியாக புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin ,India ,Artist Centenary ,DMK ,Adhikali Nadu Perur ,Minister ,Senji Mastan Pukhazaram ,Chief Minister ,Artist Centenary Celebration ,Idikakalinadu Municipal Corporation ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...